Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|

கூகுள் கிளாஸ் மூலம் லாபம் ரூ.6,200 கோடி அதிகரிக்கும்

மும்பை : கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்துவதால் பல துறைகளிலும் வேலைத் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் வருங்காலத்தில் பல துறைகளில் ரூ.6,200 கோடி அளவிற்கு லாபம் அதிகரிக்கும் என்று கார்ட்னர் அமைப்பின் ஆய்வு இயக்குனர் ஏஞ்சலா மெக்லன்டர் கூறியுள்ளார். ஸ்மார்ட் கண்ணாடி குறித்து அவர் கூறியதாவது: கூகுள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடியைப் பயன்படுத்துவ தால் வேலைத் திறன் அதிகரி க்கும் என்று எங்களது ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மருத்துவம், களப்பணி, வியாபாரம் மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்த வகை கண்ணாடியின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் உற்பத்தி துறையில் இயந்திரங்களை கையாள்வது எளிதாகிறது. மருத்துவத்துறையில் இந்தக் கண்ணாடியால், சிக்கலான ஆபரேஷன்கள் கூட டாக்டர்களுக்கு  படிப்படியாக காட்டப்படுவதால் சிகிச்சை முறையாகவும் தவறில்லாமலும் செய்யமுடியும். கட்டிடப் பணி போன்ற பணிகளில் முன்கூட்டியே கம்யூட்டர் மூலம் வடிவமைப்புகளை பதிவு செய்து கொண்டு பணிகளில் ஈடுபடுவதால் அவற்றை எளிதாக செய்யமுடிகிறது.

ஸ்மார்ட் கண்ணாடிகள் இன்னும் தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையில் இருக்கின்றது. இதில் தொழில் நுட்பங்கள் கூடக்கூட கண்ணாடியின் பயன்கள் அதிகரிக்கும். இப்போது ஒரு சதவீத அமெரிக்க கம்பெனிகளில் மட்டுமே ஸ்மார்ட் கண்ணாடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. விலைகுறைப்பு மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளால் எதிர்காலத்தில் விற்பனையும் உபயோகமும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 8 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech