திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (8ம் தேதி) மாலை 4.35 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்கிறார். தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியை அடைந்ததும் சாயாஅபிஷேகம் நடக்கிறது. 7ம் திருநாளான நாளை மதியம் 3 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவமும், இரவில் சுவாமி – தெய்வானை அம்பாள் திருக்கல்யாணமும் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet