திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர், நவ.7 – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருப்பெருமானின் இரண்டாவது வது படை வீடாக திகழ்வது திருச்செந்தூர். திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் முருகப் பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தருகிறார். கோவிலில் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து 6 ம் நாள் முருகன் சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 3&ந் தேதி தொடங்கியது. அன்று முதல் கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் தங்கி விரதம் கடைபிடித்து வருகின்றனர். விழா நாட்களில் தினமும் நடைதிறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்தி நாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது.
6&ம் நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விசுவரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடைபெறும். அதைத் தொடர்ந்து சந்தோஷ மண்டகபடியில் சுவாமி& அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியில் சாயா அபிஷேகம்(கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு) நடைபெறும்.
7&ம் நாள் அன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து விசுவரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் சாயரட்சை தீபாராதனை நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருள்கிறார். மதியம் 3 மணிக்கு சுவாமி மாலை மாற்று விழா நடைபெறும். பின்னர் இரவு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. கந்தசஷ்டி திருவிழா முன்னிட்டு ஒவ்வொரு நாளும், கோவில் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழி நடக்கிறது.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் தரிசனத்துக்காக காத்து இருக்கும் பக்தர்களுக்கு பானைகாரம், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர்(பொறுப்பு) இரா.ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ப.ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet