Monday 25th November 2024

தலைப்புச் செய்தி :

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல் *| இந்தியாவில் வாக்கு எண்ணும் முறைக்கு எலான் மஸ்க் பாராட்டு *|

மெட்ரோ ரெயில் ஓட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ. 7 – சென்னையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பணிமனையில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஜெயலலிதா வருகை தந்ததால் அவரைக் காணவும், சோதனை ஓட்டத்தைக் காணவும் பெருமளவில் மக்கள் திரண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கோயம்பேடு பணிமனையில், சென்னை மெட்ரோ ரயிலின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள்.

விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம்  வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23.085 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாம் வழித்தடம் சென்னை சென்ட்ரல் முதல் புனித தோமையார்மலை வரையிலான 21.961 கிலோ மீட்டர் தூரமும்  செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட மதிப்பீடு 14,600 கோடி ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும் சார்நிலைக் கடனாக

5 சதவிகிதமும் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு பங்கு மூலதனமாக 15 சதவிகிதமும்,  சார்நிலை கடனாக 5.78 சதவிகிதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவிகிதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து(ஒஹஙீஹடூ ஐடூசிடீஙுடூஹசிடுச்டூஹங் இச்ச்ஙீடீஙுஹசிடுச்டூ அகிடீடூஷநீ)கடனாகப் பெறப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மொத்தம் 42 ரயில் பெட்டித் தொடர்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரயில் பெட்டித் தொடர்கள் பிரேசில் நாட்டில் உள்ள ஆல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் மற்றும் ஆல்ஸ்டாம் பிராஜக்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 33 ரயில் பெட்டித் தொடர்கள், ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிட்டி என்ற இடத்தில் துவக்கப்பட்ட அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 2 வழித்தடங்களில் படு வேகமாக நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரை ஒரு பாதையும், சென்டிரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும்.

இதே போல் மற்றொரு வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும்.சுரங்கப் பாதையில் உள்ளேயே ரெயில் நிலையங்களும், மேம்பாலத்தில் மேலேயே ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகிறது.முதல் கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்பேடு _ பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015_ம் ஆண்டில் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கி விடும்.

 பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் கடந்த ஜூலை மாதம் சென்னை வந்து சேர்ந்தது. அந்த பெட்டிகள் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை இயக்குவதற்கான மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. பெட்டிகளின் தரம் பாதுகாப்பு இயக்கம் போன்றவை சோதனையிடப்பட்டன. பிரேசில் நாட்டு பொறியாளர்கள் தங்கள் ஆய்வுப் பணியை சென்னை மெட்ரோ ரயில் பொறியாளர்களுடன் இணைந்து செய்தனர். ரயில் என்ஜின்களை இயக்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மெட்ரோ ரெயில்களை நிறுத்தி வைக்கவும், பராமரிக்கவும் கோயம்பேட்டில் பிரமாண்டமான பணிமனை அமைக்கப்பட்டு தண்டவாளங்களும், ஷெட்டுகளும் போடப்பட்டுள்ளன.

.தொடக்க விழா நடந்த இடத்தில் எளிமையான முறையில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அங்கு வந்த முதல்_ அமைச்சர் ஜெயலலிதாவை மெட்ரோல் ரெயில் திட்ட அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் ரயில் பெட்டித் தொடரின் சோதனை ஓட்டம் பிற்பகல் 1.55 மணிக்கு தொடங்கியது.  கோயம்பேடு பணிமனையில் சோதனை ஓட்டத்தை நேற்று முதல் _ அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டுகொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

. அப்போது அங்கு கூடியிருந்த அதிகாரிகளும், ஊழியர்களும், பணியாளர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மெட்ரோ ரயிலில் குளிர்ச்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இவற்றை  மெட்ரோ ரயில் தொடரின் பெட்டிக்குள் சென்று முதலமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்கள்.

. அதற்கு முன்னர், மெட்ரோ ரயிலுக்கான 25 கி.வோ. உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்கான பொத்தானை அழுத்தி துவக்கி வைத்தார்கள். பின்னர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

முதல் _ அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் 4 பெட்டிகளுடன் கூடிய மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கியது. பணிமனையில் அமைக்கப்பட்டு இருந்த 800 மீ.தூர தண்ட வாளத்தில் ஓடி நின்றது.

சோதனை ஓட்டத்துக்காக மெட்ரோ ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் க. இராஜாராமன் வரவேற்று பேசினார். தொழில் துறை அமைச்சர் பி. தங்கமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்,  சென்னை மெட்ரோ ரயில்  இயக்குநர் (திட்டம்) ஆர். ராமநாதன், இயக்குநர் (இயக்கம்) எல். நரசிம் பிரசாத், இயக்குநர் (நிதி) விஜயா காந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உட்பட அமைச்சர்களும், மேயர்.சைதை.துரைசாமி, துணை மேயர் பா.பெஞ்சமின் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

பணிமனை பாதுகாக்கப்பட்ட இடம் என்பதால் உள்ளே மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.முதல்வர் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன.

பாதுகாப்பு வேலிக்கு வெளியே மெட்ரோ ரெயில் ஓடுவதை காண ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். மெட்ரோ ரெயில் ஒட துவங்கியதும். அனைவரும் கைத்தட்டி, ஆரவாரமிட்டதுடன் முதல்வர் வாழ்க என்றும் கோஷமிட்டனர்.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற நவீனமான இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தை சென்னை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 7 2013. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech