மீனாட்சியம்மன் திருக்கோயிலில் நவ.12 முதல் கார்த்திகை உற்சவம்
மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் வரும் 12ஆம் தேதி முதல் கார்த்திகை உற்சவம் தொடங்குகிறது.
இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் கார்த்திகை உற்சவம் 12.11.2013 முதல் 21.11.2013 வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாள்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடிவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
வரும் 17ஆம் தேதி (ஞாயிறு) திருக்கார்த்திகை அன்று திருக்கோயில் முழுதும் லட்சதீபம் ஏற்றப்படும். அன்று இரவு 7 மணிக்கு அருள்மிகு சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி செல்வார். மேலும் அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி அருகிலும், பூக்கடைத் தெருவிலும் சொக்கப்பன் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உற்சவ நாள்களில் திருகோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பிலோ தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகியவை நடத்தப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து தி.கண்ணன் தலைமையில், செயல் அலுவலர் பி.ஜெயராமன் செய்துள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet