தானாக ஓடிய அரசு பஸ் முதியவர் மீது ஏறியது
மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில், தானாக ஓடிய அரசு பஸ் மோதி முதியவர் இறந்தார். மூதாட்டி படுகாயமடைந்தார்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதிய பஸ் நிலைய பணிகள் கடந்த 3 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையாததால், லாரி பேட்டையை தற்காலிக பஸ்நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, நேற்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து, சின்னத்துரை கடற்கரை கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார். அப்போது, அந்த பஸ் திடீரென தானாக இயங்கி தாறுமாறாக ஓட தொடங்கியதால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் அலறினார்கள். மேலும், அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பயணிகள் உயிருக்கு பயந்து அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் அந்த பஸ் அங்கிருந்த வளையல், பாசி கடைக்குள் புகுந்ததில் கடையில் பாசி விற்றுக் கொண்டிருந்த சாகுல் அமீது (60) என்பவரும், கமலம் (60) என்ற பெண்மணியும் படுகாயமடைந்தனர். அங்கிருந்த அரசமரத்தில் மோதி பஸ் நின்றது. படுகாயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் முதியவர் சாகுல் அமீது பரிதாபமாக இறந்தார். பெண்மணி கமலம் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து டிரை வரை கைது செய்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet