பஞ்சாயத்துத் தலைவர் ரங்கநாதன் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர்
கடனை திருப்பித் தராதவரின் காதை கடித்து எடுத்துக் கொண்டு வருவார் நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில். அது போன்று விருத்தாசலம் அருகே உதவித் தொகை வாங்கித் தராததால் பஞ்சாயத்துத் தலைவரின் மூக்கைக் கடித்து துப்பினார் முதியவர் ஒருவர்.
மருங்கூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பெயர் திரிசங்கு. இவர் வயது 55, 60 வயதானவர்களுக்கே முதியோர் உதவித் தொகை கிடைக்கும். ஆனால் பஞ்சாயத்துத் துணைத் தலைவர் ரங்கநாதன் என்பவர் இவருக்கு உதவித் தொகை வாங்கித் தருவதாக கூறி விண்ணப்பமும் அனுப்பினார்.
ஆனால் பாவம், ரங்கநாதன் நேர்மையாக முயற்சிகள் செய்தார் பலனில்லை. இதனையடுத்து
நேற்று மாலை ரங்கநாதம் வீட்டுக்குச் சென்றார் மூக்குக் கடி புகழ் முதியவர் திரிசங்கு. எல்லாருக்கும் வாங்கித் தருகிறாய் எனக்கு மட்டும் ஏன் வாங்கித் தர மாட்டேன் என்கிறாய் என்று தகராறு செய்துள்ளார்.
ரங்கநாதன் எவ்வளவு கூறியும் முதியவர் ஒப்புக் கொள்ளவில்லை. வாக்குவாதம் முற்றியது.
திடீரென திரிசங்கு ரங்கநாதன் மேல் பாய்ந்து அவரது மூக்கைக் கடித்தார். இதில் ரங்கநாதன் மூக்கு துண்டானது.
ரத்தம் கொட்ட, ரங்கநாதன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி முதியவர் திரிசங்கு இப்போது கம்பி எண்ணி வருகிறார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet