தமிழகம் – புதுவையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை
சென்னை, நவ. 4 – தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது குமரி கடலோர பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழையும், மயிலாடியில் 9 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet