ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சச்சின்
ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது 1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார்.
அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள், இன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.இவ்வாறு தெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet