அமெரிக்க சுகாதார மையத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கிய இந்திய மருத்துவர்
அமெரிக்கவாழ் இந்திய மருத்துவரான விஜய் சங்வி என்பவர் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்துள்ளார். இந்தத் தொகையானது மருத்துவர்கள் விஜய் மற்றும் குஷ்மன் சங்வி அறக்கட்டளை என்ற பெயரில் இதய ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுகாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்லோஷிப் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும்.
இத்தகைய நன்கொடை அறக்கட்டளை அமைப்பை சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை டாக்டர் விஜய் பெற்றுள்ளார். இமேஜிங் தொழில்நுட்பத்தில் நவீன யுத்திகளைப் பயன்படுத்துவதன்மூலம் பலகலைக்கழக சுகாதார மையத்தின் இரண்டு ஆய்வகங்களையும் மேற்பார்வையிடும் பணியிலும் இந்த உறுப்பினர் ஈடுபடக்கூடிய வகையில் அவருக்கு இந்த அறக்கட்டளை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1966-ம் ஆண்டு முதல் சின்சினாட்டி மருத்துவ சமூகத்தில் செயல்பட்டு வருபவர் டாக்டர் விஜய் சங்வி ஆவார். இவர் 1971-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை அங்குள்ள யூத மருத்துவமனையின் இதய நோய்ப் பிரிவில் மருத்துவ இயக்குனராகப் பணியாற்றினார். அப்போது அங்கு இந்தத் துறையிலான முக்கியத் தொழில் நுட்பங்கள அனைத்தையும் இவர் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet