சுட்டி வீரருக்கு கவாஸ்கர் வாழ்த்து 1 லட்சம் பரிசு
இந்தியாவையே திரும்பி பார்க்க செய்த சிறுவன் பிருத்வி. பள்ளிகளுக்கு இடையே மும்பையில் நடந்த போட்டியில் 546 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த பிருத்வியை பத்திரிகைகள் பாராட்டியது மட்டுமல்லாமல் அடுத்த சச்சின் உருவாகி வருகிறார் என்று ஆரூடம் தெரிவித்தன.
கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தனிப்பட்ட முறையில் பிருத்விக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் கூறியிருப்பது:
அன்பு பிருத்வி, இது சுருக்கமாக உனக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதம். 546 ரன்கள் எடுத்ததற்காக உன்னை பாராட்டுகிறேன். சிறப்பாக பேட்டிங் செய்தாய். ரன்களை குவிக்க வேண்டும் என்ற பசி உன்னிடம் எப்போதும் இருக்க வேண்டும். சதம் என்பது முதல் அத்தியாயம் என்பதை மனதில் வைத்துக் கொள். உனக்கு எனது வாழ்த்துக்கள். ஆண்டவன் உன்னை ரட்சிப்பார். இவ்வாறு அந்த கடிதத்தில் கவாஸ்கர் கூறியிருந்தார்.
இதுமட்டுமல்லாமல் கவாஸ்கரின் நிறுவனமான பி.எம்.ஜி. பிருத்வியை தத்து எடுத்துள்ளது. மேலும் பிருத்விக்கு ரூ.1 லட்சம் பரிசும் வழங்கியிருக்கிறது. கவாஸ்கரின் கடிதம் குறித்து பிருத்வி கூறுகையில், அவரது கடிதம் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய பேட்டிங்கை நான் டி.வி.யில் நிறைய முறை பார்த்துள்ளேன். நான் அவருடைய தீவிர ரசிகன். இந்த கடிதத்தை பெரிய பொக்கிஷமாக என் வாழ்நாள் முழுவதும் வைத்திருப்பேன் என்றார்.
வளர்ந்துவரும் வீரர்களை உற்சாகப்படுத்துவது கவாஸ்கருக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன் 1987 ஆண்டு டெண்டுல்கருக்கு ஒரு ஆறுதல் கடிதம் அனுப்பியிருக்கிறார். அப்போது சிறந்த மும்பை ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருது சச்சினுக்கு கிடைக்கவில்லை. இதனால் வருத்தத்துடன் இருந்த டெண்டுல்கருக்கு கவாஸ்கர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விருது கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதே. கடந்த காலங்களில் விருது பெற்றவர்கள் பட்டியலில் ஒரு பெயர் விடுபட்டிருந்தது. அந்த நபர் பிற்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் சோடை போனது கிடையாது என்று கூறியிருந்தார். அவர் கூறியிருந்த அந்த நபர் வேறு யாரும் இல்லை. அது அவரையே (கவாஸ்கர்) குறிப்பிட்டு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet