ஹெலன் புயல் ஆந்திராவில் கரையை கடந்தது: மசூலிப்பட்டினத்தில் கனமழை
சென்னை, நவ. 22-
வங்க கடலில் உருவான ஹெலன் புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்திற்கு தெற்கே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது மேற்கு நோக்கி சென்றுகொண்டிருக்கும் புயல் வலுவிழக்காமல் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. கரையை கடந்தபின்னரும் 6 மணி நேரத்துக்கு மணிக்கு 80 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். அதன்பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழக்கத் தொடங்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் காரணமாக அடுத்த 6 மணி நேரத்துக்கு தெலுங்கானா பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் கரை கடந்ததையடுத்து அப்பகுதியில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததில் ஸ்ரீதனப்பள்ளி, பந்தர் ஆகிய இடங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
புயல் எச்சரிக்கையையடுத்து ஏற்கனவே ஆந்திராவின் வடகிழக்கு கடலோர பகுதிகளில் உள்ள 11 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக சுமார் 20 குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet