மகளிருக்காக மட்டும் திறக்கப்பட்ட பாரதிய மஹிலா வங்கி.
முன்னால் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு , பாரதிய மஹிலா வங்கி என்று அழைக்கப்படும் அனைத்து மகளிர் வங்கி இன்று லக்னோவில் திறக்கப்பட்டது.
இதனை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மும்பையில் இருந்து கானொளி காட்சி மூலம் திறந்து வைத்தனர். முதலில் நாடு முழுவதும் எழு கிளைகள் திறக்கப்படுகிறது. லக்னோவில் இன்று திறக்கப்பட்ட கிளையில் 10 பெண் ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மகளிருகான பாரதிய மஹிலா வங்கி தொடங்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கட்டா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்டவற்றிலும் மஹிலா வங்கி திறக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 25 கிளைகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet