உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-வது சுற்றை டிரா செய்தார் விஸ்வநாதன் ஆனந்த்
சென்னை, நவ. 18-
உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 6 போட்டிகள் முடிவடைந்த நிலையில், கார்ல்சன் 4-2 என முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில் இன்று 7-வது சுற்று போட்டி நடைபெற்றது. 2 சுற்றுகளில் தொடர்ந்து தோல்வியடைந்த விஸ்வநாதன் ஆனந்த் இன்று வெள்ளை காய்களுடனும், கார்ல்சன் கறுப்பு காய்களுடனும் விளையாடினர். கடுமையாகப் போராடிய விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சனின் வெற்றி வாய்ப்பை தடுத்து டிரா செய்தார். 32-வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்ய இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற 7 சுற்று முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் 2.5 புள்ளிகளும், கார்ல்சன் 4.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர். 8-வது சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet