Monday 25th November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

இடி – மின்னல் – மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு நிதி

சென்னை, நவ.18 – இடி – மின்னல் – மின்சாரம் தாக்கி இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து  தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில்  அண்மையில் பெய்த மழையின் காரணமாக,  18.10.2013 அன்று விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகைய்யா என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன்;

ஈரோடு  மாவட்டம்,  மொடக்குறிச்சி உள்வட்டம், புஞ்சைலக்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவரின் மகன்  சத்தி;

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், கோதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த  பிரான்சிஸ் என்பவரின் மகன் பெர்க்மான்ஸ்;

19.10.2013 அன்று திருநெல்வேலி மாவட்டம், மானூர் குறுவட்டம், எட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த  சீவலப்பேரியான் என்பவரின் மனைவி மரியம்மாள்;

வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த  கருத்தப்பாண்டி என்பவரின் மகன் துரைப்பாண்டி, செல்லக்கண்ணு என்பவரின் மகன் லெட்சுமணன்;

20.10.2013 அன்று  காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பௌந்தகரணை கிராமத்தைச் சேர்ந்த  செல்வராஞு என்பவரின் மகன் அன்பு;

செய்யூர் வட்டம், பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த  மணிகண்டன் என்கிற டேவிட் என்பவரின் மனைவி பூஜா;

ஆகியோர் இடி, மின்னல் தாக்கி  உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

23.10.2013 அன்று  வீட்டின் அருகே அறுந்த கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் திருவள்ளூர் மாவட்டம், போத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திரை என்பவரின் மகன் கேசவன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்   அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 18 2013. Filed under Headlines, செய்திகள், தமிழகம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech