திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், தான் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்தார். இதை நினைவுகூரும் வகையில் திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகைதீப திருவிழா கடந்த 8–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளாக 13–ந் தேதி வெள்ளிதேரோட்டமும், 14–ந் தேதி மகாதேரோட்டமும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என ஒவ்வொருவராக பலிபீடத்தின் அருகே எழுந்தருளினார்கள்.
அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்தார். அவர் காட்சியளித்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. மலையில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் தூரத்திலும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கினார்கள். திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet