சபரிமலையில் டிச.26 வரை மண்டல கால நெய்யபிஷேகம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால நெய்யபிஷேகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை நடக்கிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, கடந்த 15ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மகர விளக்கு பூஜை விழா டிசம்பர் 30ம் தேதி தொடங்கும். தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.விழாக்கால நெய்யபிஷேகம் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. தினமும் காலை 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். மண்டல கால நெய்யபிஷேகம் வரும் டிசம்பர் 26ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்னிதானத்திலும், பம்பையிலும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்து தனியாக குழந்தைகள் பிரிந்து சென்று தத்தளிக்கும் வேளையில், அவர்களை எளிதில் கண்டுபிடிக்க போலீசார் மஞ்சள் நிற ‘டேக்’ முறையை அறிமுகம் செய்தனர். கையில் கட்டி விடப்படும் டேக்கில் குழந்தை மற்றும் அவரது தந்தையின் பெயர், உடன் வருகிறவர் பெயர், மொபைல் எண் போன்றவை பதிவு செய்யப்படும். இதன் மூலம் அந்த குழந்தைகள் பக்தர்கள் கூட்டத்தில் தனியாக சென்றால், அவர்களை அடையாளம் காண அது வசதியாக இருக்கும் என்றனர் போலீசார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet