Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

புதுடெல்லி, நவ. 16-

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார்.

greensiteஇந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது.

இதேபோல் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இதன்மூலம் பாரத ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார். மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் சச்சின் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகின் கதாநாயகனாகத் திகழ்ந்த சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 51 சதம் 68 அரை சதங்களுடன் 15921 ரன்கள் அடித்துள்ளார். 463 ஒருநாள் பேட்டிகளில் 49 சதம், 96 அரை சதங்களுடன் 18426 ரன்கள் விளாசி விடைபெற்றுள்ளார். இவரது சாதனையைப் பாராட்டி பத்மவிபூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடினர். பாரத் ரத்னா விருது பெறும் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 79 வயதான ராவ், அறிவியல் தொடர்பாக 1500 ஆய்வுக் கட்டுரைகளும் 45 புத்தகங்களும் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுள்ள ராவ், தற்போது பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவராக உள்ளார்.

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

Posted by on Nov 16 2013. Filed under Headlines, இந்தியா, செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »