டெல்லி–காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்
புதுடெல்லி, நவ.16–
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 12.41 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.41 மணி வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இது ரிக்டர் அளவில் 3.1 என இருந்தது. எனவே சேதம் இல்லை. தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் வீடுகள் லேசாக குலுங்கியதால் வீதிக்கு ஓடிவந்தனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை மீண்டும் டெல்லியிலும் காஷ்மீரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டம் லே நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது.
நிலநடுக்கம் அதிர்வுகள் டெல்லியிலும் லேசாக உணரப்பட்டது. இது 4.0 ரிக்டர் அளவில் இருந்தது. கடந்த முறை 3.1 ரிக்டர் அளவு இருந்தது. இப்போது 4.0 ரிக்டர் அளவாக அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
என்றாலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மீண்டும் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அனுபவங்களை டூவிட்டர் இணையதளம் மூலம் ஒரு வருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet