கன்னியாகுமரி -மலையில் இருந்த ராட்சத பாறை சரிந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்த பாறை ஒன்று கீழே விழும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் இரண்டு மணி நேரம் போராடி அந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப் பட்டது.
ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால் மலை உச்சியில் உள்ள 2 டன் எடை கொண்ட ராட்சத பாறை ஒன்று குடியிருப்பு பகுதியை நோக்கி உருண்டு வந்தது.
அப்போது 25 அடி உயரத்தில் வேறு ஒரு பாறையில் சிக்கி நின்றது இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.மேலும் இதில் இருந்து உடைந்த பாறையின் ஒரு துண்டு சுப்பையா என்பவரது விட்டு சுற்றுச்சுவர் அருகே இருந்த இரும்பு கதவில் விழுந்தது. மற்றொரு துண்டு பழனி என்பவரது வீட்டின் அருகே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி பாறையை உடைத்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பெரும் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet