விளையாட்டு துறையை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு
விளையாட்டு துறையை மேம்படுத்தும் பொருட்டு 4 கோடி மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்த தமிழக முதலமைச்சர் 10 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்குவாஷ் ஆடுகளம்,
திருவண்ணாமலையில் 57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு அரங்கு,,, ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
அரியலூரில் நீச்சல் குளம், கரூரில் விளையாட்டு வளாகம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லில் விடுதிகள் என,, 4 கோடியே 64 லட்சம் மதிப்பிலான கட்டடிங்களும் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
இதேபோன்று, தூத்துக்குடியில் 3 கோடி மதிப்பில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், நெல்லையில் 3 கோடியே 50 லட்சம் செலவில் செயற்கை இழை ஓடுதள பாதை போன்ற பணிகளுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். மொத்தம் 10 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet