நடிகர் சிவாஜி சிலை தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு
சென்னை, நவ. 14 – நடிகர் சிவாஜிகணேசன் சிலை தொடர்பான வழக்கை நீதிபதிகள் வருகிற 26_ந்தேதி தள்ளி வைத்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் சீனிவாசன் என்பவர் .மெரீனா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் அந்த சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போ போக்குவரத்து போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் வருகிற 26_ந்தேதி தள்ளி வைத்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet