1000 கிலோ அணுஆயுதங்களை சுமந்துசெல்லும் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
பலசூர், நவ. 23-
ஒடிசா மாநிலம் பலசூர் அருகேயுள்ள சண்டிபூர் கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பற்படை கப்பலிலிருந்து இன்று தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த தனுஷ் ஏவுகணை, 500 கிலோ முதல் 1000 கிலோ வரை அணுஆயுதங்களை சுமந்து சென்று வெற்றி இலக்கை மிக துல்லியமாக தாக்கியது.
இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட பிரித்வி ஏவுகணையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த தனுஷ் ஏவுகணை, இன்று காலை 11.10 மணிக்கு மத்திய பாதுகாப்பு துறையின் போர்க்கால நடவடிக்கை கமிட்டியின் மூலம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
மத்திய ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப்படி, பாதுகாப்பு ஆராய்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 5 ஏவுகணைகளில் ஒன்றாக இந்த தனுஷ் ஏவுகணை உள்ளது. இந்த தனுஷ் ஏவுகணை நீண்ட தூரம் சென்று நிலம் மற்றும் கடல் எல்லை இலக்குகளை மிக துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவையாகும்.
திரவ எரிபொருள் கொண்டு செலுத்தப்படும் ஒரு கட்ட தனுஷ் ஏவுகணை ஏற்கனவே ஆயுதப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet