சென்னையில் முதன்முதலாக 3 டி- புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய புதிய டப்பிங் தியேட்டர் ‘டான் ஸ்டுடியோ’: பாடகி எஸ்.ஜானகி திறந்து வைத்தார்
சென்னை தி.நகர் வடக்கு போக் சாலையில் ‘டான் ஸ்டுடியோ’ எனும் பெயரில் புதிதாக ஒரு எடிட்டிங், டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆர்.ஜி.பி’ (RGB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிரைமரி வர்ணங்களை எண்ணத்தில் கொண்டு ரெட் சூட், கிரீன் சூட், ப்ளூ சூட் என மூன்று பிரதான வண்ணங்களில் அழகு மிளிரும் இந்த ‘டான் ஸ்டுடியோ’வுக்குள் மூன்று பிரமாண்ட எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..
‘டான் ஸ்டுடியோ’வின் உள் அமைந்த இந்த மூன்று எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டரில் ஒன்றான ‘ஹெச்.டி- 3டி’ புரொஜக்ஷன் வசதியுடைய ‘ரெட் சூட்’ டப்பிங்- ரெக்கார்டிங் தியேட்டரை பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி திறந்துவைத்தார். அதே நாளில் ‘கிரீன் சூட்’ எடிட்டிங் ஸ்டுடியோவை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார். ‘ப்ளூ சூட்’ எடிட்டிங் தியேட்டரை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ படங்களின் இயக்குனர் ராம் ஆரம்பித்து வைத்தார்.
‘டான் ஸ்டுடியோ’ எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களின் பிரமாண்டமான வசதிகளைக் கண்டு இந்த மூன்று சினிமாக்கலைஞர்களும் வியந்து, பாராட்டினார்கள்.
பாலிவுட்டையும் தாண்டி, ஹாலிவுட்டுடன் போட்டிபோடும் தமிழ் சினிமாவின் தலைநகரமான சென்னையில் இப்படி ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங் தியேட்டர்களை நிர்மாணிக்கவேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது? என்று ‘டான் ஸ்டுடியோ’ உரிமையாளர் தன விக்னேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
எனக்கு சொந்த ஊர் விருதுநகர். சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்ற ஆசையில் ஏழு வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து, ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு தனியார் நிறுவனத்தில் ‘டிஜிட்டல் பிலிம் மேக்கிங்’ கோர்ஸ் முடித்தேன். அதன்பின் ‘வர்ணம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தேன்.
அதைத் தொடர்ந்து குவைத்தில் நான்காண்டுக்காலம் விளம்பரப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரி படங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. அங்கு பெயரும்,பொருளும் ஓரளவு ஈட்டிய நான், சென்னை திரும்பியதும் என்னுள் இருந்த சினிமா ஆசையின் வெளிப்பாடாக இப்படி ஒரு எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டேன்.
எனது சினிமா நண்பர்களான நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் ராம், பாலாஜி தரணிதரன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்தேன். சென்னையில் ஹெச்.டி டப்பிங் தியேட்டர்கள் இருக்கின்றன. 3டி புரொஜக்ஷன் வசதியுடன் கூடிய டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்கள் இல்லை. அதுமாதிரி எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் தியேட்டர்களை நிர்மாணித்தீர்கள் என்றால், தமிழ்த் திரையுலகினருக்கு வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள்.
அதன்படி, ஹெச்.டி-3டி வசதியுடன் கூடிய ஒரு ஸ்டுடியோவை உருவாக்கத் திட்டமிட்டு களம் இறங்கியபோது தயார் ஆனதுதான் இந்த ‘டான் ஸ்டுடியோ’. பொதுவாக ‘ஆர்.ஜி.பி’ எனப்படும் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று அடிப்படை வண்ணங்களை சரிவிகிதத்தில் ஒன்று சேர்த்தால், பால் வெண்மை உருவாகும். அதனடிப்படையில்தான் இந்த ‘டான் ஸ்டுடியோ’வின் வராண்டாவை வெண்மை நிறத்திலும், ஹெச்.டி-3டி புரொஜக்ஷன் வசதியுடைய டப்பிங்-ரெக்கார்டிங் ஸ்டுடியோவை ‘ரெட் சூட்’ எனும் சிவப்பு நிறத்திலும், ‘கிரீன் சூட்’ எனும் பெயரில் ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவை பச்சை வண்ணத்திலும், மற்றொரு எடிட்டிங் அறையை ‘ப்ளூ சூட்’ எனும் பெயரில் நீலவண்ணத்திலும் வடிவமைத்துள்ளேன்.
இனி, எடிட்டிங், டப்பிங், ரெக்கார்டிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் டெக்னிக்கல் புதுமைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ‘டான் ஸ்டுடியோ’ வாயிற்கதவைத் தட்டுவது நிச்சயம் என்று நம்புவோம்!
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet