பிரிட்டனில் புயல்: 6 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு
பிரிட்டனில் “செயிண்ட் ஜூடு’ புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மின்சார வசதி துண்டிக்கப்பட்டது.
ஜூடு புயல் காரணமாக தலைநகர் லண்டனிலும் பிரிட்டனின் மற்ற பகுதிகளிலும் கன மழை பெய்தது. சூறைக்காற்று பலமாக வீசியதால் லண்டனுக்கு வடக்கில் உள்ள கெண்ட் மற்றும் வாட்ஃபோர்டு பகுதிகளில் மரம் முறிந்து விழுந்து 17 வயது பெண்ணும் ஒரு முதியவரும் இறந்தனர். மேற்கு லண்டனில் மரம் முறிந்து விழுந்ததால் ஏற்பட்ட காஸ் வெடிவிபத்து மற்றும் வீடு இடிந்தது ஆகிய சம்பவங்களில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, கிழக்கு சசக்ஸ் பகுதியில் நியூஹெவனை அடுத்த வெஸ்ட் பீச் அருகே கடலில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஒரு சிறுவனைக் காணவில்லை என்று போலீஸôர் தெரிவித்தனர். புயல் பாதிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் 130 விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet