பல்வலிக்கு எளிய தீர்வு என்ன?
திடீரென்று பல் வலித்தால் கிராம்புதான் கை கண்ட மருந்து. இரண்டு கிராம்புகளை வலியுள்ள பல்லின்மேல் வைத்து சிறிது நேரம் கடித்தபடியிருந்தால் வலி நின்று போகும். அல்லது வலி குறையும். கிராம்புவை விட பல்வலிக்கு நல்ல மருந்து கிடையாது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகாது. வலிக்கான காரணம் என்ன என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சையை செய்தாக வேண்டும்.
ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைப் போட்டு கரைத்து கொப்பளித்து வந்தால் வலி நின்றுபோகும். உப்பு நீரினால் பல் ஈறுகளில் உள்ள கிருமிகளும் அழிந்து போகும். இதை தினமும் செய்து வந்தாலே பல்வலி வராது.
எதாவது அடிபட்டதனால் பல்லில் வலி உண்டாகும்போது ஐஸ் கட்டி வைத்தால் வலி நிற்கும். வீக்கமும் குறையும். ஆனால் பல்லிற்குள் பிரச்னை இருந்து வலி வந்தால் அதற்கு ஐஸ் கட்டி உதவாது.
கற்பூரம் என்பது கெமிக்கல் கலந்தது. அதை பல்லில் நீண்ட நேரம் வைத்திருந்தால், அருகில் உள்ள கன்னச் சுவர்கள் அரித்துப்போகும், தற்காலிக வலி நின்றாலும் அது நல்லதல்ல.
பற்களில் படியும் உணவுத்துகள்கள் ஒரே இடத்தில் தங்கி, அதை நாம் சரிவர சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால் கண்டிப்பாக பல்லில் சொத்தை வழும்.
பல் தேய்க்கும் முறை பற்றி நமக்கு யாரும் சரிவர சொல்லித் தருவதில்லை. விளம்பரங்களைப் பார்த்து, ஒரு பிரஷ் நிறைய டூத் பேஸ்ட்டை நிரப்பி, பல்லைத் தேயோ தேய் என்று மணிக்கணக்காக தேய்க்கிறார்கள். அது கூடாவே கூடாது. ஒரு பட்டாணி அளவு டூத் பேஸ்ட் எடுத்து, ஒரு சில நிமிடங்கள் பல் தேய்த்தால் போதும். ஒரு நாளைக்கு காலையிலும், இரவு தூங்கப் போவதற்கு முன்புமாக இருமுறை தேய்க்க வேண்டும்.
ஆலமர விழுது, வேலமரக்குச்சி, வேப்பங்குச்சி, அத்தி, எருக்கு, இலந்தை, காட்டாமணக்கு ஆகியவற்றைக் கொண்டு இன்றைக்கும் பல் தேய்ப்பவர்கள் கிராமங்களில் இருக்கிறார்கள். இவற்றால் பல் தேய்ப்பது பல்லுக்கு உறுதியைத்தரும். அதோடு, அதில் உள்ள துவர்ப்பு, கசப்பு, காரம் உள்ளிட்ட இயற்கைக் சுவையானது பற்களைச் சுற்றியுள்ள கிருமிகளை அழித்து விடும் தன்மை கொண்டவை.
இவை நகர்ப்புறங்களில் கிடைக்காததால் டூத் பிரஷ் உபயோகிக்கிறார்கள். தவறில்லை. ஆனால் பிரஷில் அழுக்கு ஒட்டாதவாறு பார்த்தக்கொள்ள வேண்டும். மேலிருந்து கீழ் கீழிருந்து மேலாக பல் தேய்க்க வேண்டும். ஈறுகளில் பிரஷ் படாதவாறு தேய்க்க வேண்டும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet