சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெண் பொங்கல்
வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி – 2 டம்ளர்
பயத்தம் பருப்பு – 1/2 டம்ளர்
உடைத்த மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிது
முந்திரி பருப்பு – 8
நெய் – 100 கிராம்
செய்முறை
பயத்தம் பருப்பு , அரிசி இவற்றுடன் 4 -1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, பெருங்காயப் பவுடர் சேர்த்து குக்கரில் விட்டு 4 விசில் வந்தவுடன் இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உடைத்த மிளகு, மிக பொடிசாக நறுக்கிய இஞ்சி, சன்னமாக உடைத்த முந்திரி பருப்பு, கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளியுங்கள்.
வேக வைத்துள்ள பொங்கலில் இந்த தாளித்ததை கொட்டி நன்கு கிளறி விடுங்கள். தேவையெனில் கொஞ்சம் மஞ்சல் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet