தக்காளிக் குழம்பு
தக்காளிக் குழம்பு
தேவையான பொருட்கள்
தக்காளி – 6
பெரிய வெங்காயம் – 3
பூண்டு 1 (முழுதாக)
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
கடுகு – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
சோம்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தாழை சிறிதளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பெரிய பெரிய துண்டங்களாக நறுக்குங்கள். பூண்டு தோலை நீக்குங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு தாளியுங்கள். பிறகு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கடைசியில் புளி கரைசலை ஊற்றுங்கள். நன்கு கொதித்து பச்சை வாடை போனதும் கறிவேப்பிலை, மல்லித்தாழை தூவி இறக்குங்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet