பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு அன்னை தெரசா சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். அதற்குப்பிறகு ஏராளமான ஹிந்திப்படங்களிலும்.ரட்சகன் உள்ளிட்ட தமிழ்ப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுஷ்மிதா,பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொதுநலப்பணியாற்றி வருகிறார்.
அவருடைய சேவையை பாராட்டி ஹார்மனி பவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை தெரேசா சர்வதேச விருதை வழங்கி உள்ளது.மும்பையில் நடைபெற்ற விழாவில் விருதைப்பெற்றுக்கொண்ட சுஷ்மிதா சென், அன்னை தெரசாவை வெகுவாக புகழ்ந்து பேசினார்.இதுவரை திருமணம் செய்து கொள்ளாத சுஷ்மிதா சென், ஆதரவற்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet