சீரடி சாய்பாபா கோயிலில் 3 நாளில் 3.44 கோடி காணிக்கை
சீரடி: தசரா பண்டிகைகைய முன்னிட்டு மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பா கோயிலுக்கு கடந்த 3 நாளில் 3.44 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஸ்ரீ சாய்பாபா சனஸ் தான் அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அஜய் மோர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:தசரா பண்டிகையை முன்னிட்டு சீரடி சாய் பாபா கோயிலுக்கு கடந்த 3 நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் மூலம் 3 கோடியே 44 லட்சத்து 49 ஆயிரம் நன்கொடை கிடைத்துள்ளது. இவற்றில் 3 கோடி அளவுக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்களாகவும் மற்றும் பணமாகவும் கிடைத்தது. மீதத் தொகை கோயிலில் உள்ள தங்கம் விடுதிகள் கட்டணம் மற்றும் பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்தது.அவுரங்காபாத்தைச் சேர்ந்த பக்தர் 756 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் வழங்கினார். இவற்றின் மதிப்பு 21 லட்சம். டெல்லியைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் 36 கிலோ எடையுள்ள வெள்ளி இருக்கை வழங்கினர். இவற்றின் மதிப்பு 17 லட்சம். கடந்தாண்டு இதே காலத்தில் கிடைத்த நன்கொடையுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு 1.57 கோடி குறைவாகவே கிடைத்தது. இவ்வாறு அஜய் கூறினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet