விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பேன் : பத்மராஜன் முயற்சி
சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் இதுவரை 155 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது ஏற்காடு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் டேம் ராமன்நகரை சேர்ந்த பத்மராஜன் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்த்து ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
இதற்கு எம்.எல்.ஏ.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தால் பத்மராஜனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பத்மராஜன் களம் இறங்குகிறார்.
வருகிற 9-ந்தேதி ஏற்காடு இடைத்தேர்தலில் பத்மராஜன் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் தொகுதியில் பத்மராஜன் போட்டியிட்டு அதிகபட்சம் 6273 ஓட்டுகள் பெற்றார். இதுவே இவர் வாங்கிய அதிக ஓட்டுகள் ஆகும்.
பத்மராஜன் இதுவரை 155 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். மேலும் 4 முறை ஜனாதிபதி பதவிக்கு மனுதாக்கல் செய்தார். 4 முறையும் எம்.பி.க்கள் யாரும் முன்மொழியாத காரணத்தால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
ஈரோடு வந்த பத்மராஜன் இதுபற்றி கூறும்போது, ‘‘வெற்றியை அதிக நேரம் சுவைக்க முடியாது. என்னை பொறுத்தமட்டில் தோல்வியே என் பலம். லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டேன். விரைவில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பேன்’’ என்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet