மோடி பேச்சுக்கு எதிரான வீடியோ ஆதாரம் : வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் மரண இறுதி ஊர்வலத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை என்று நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஆனால் மாறாக ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டதற்கு ஆதாரமான வீடியோவை திக்விஜய் சிங் தனது ட்விட்டரில் வெளியிட்டார். அசல் வீடியோவை யூடியூபில் பதிவேற்றியது பிரிட்டிஷ் பாத்தி டாட் காம் ஆகும்.
இது குறித்து கூறிய திக்விஜய் சிங், மோடி ஒரு பொய்யர் என்றும் அவரது கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றார்.
மேலும் மத்தியப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமேஷ்வர் கூறுகையில், இதுபோன்ற விசிறியடிக்கும் கருத்தை கூறுவதற்கு முன்னால் மோடி 3 புத்தகங்களையாவது இது குறித்து வாசித்திருக்கவேண்டும் என்றார். மேலும் வல்லபாய் படேலின் மகள் எழுதிய புத்தகத்தையே மோடி வாசிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவால்கர் படேல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாரா? என்று மோடியை திருப்பி கேட்டுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet