நடிகை சரிதா புகாருக்கு முகேஷ் பதில்
நடிகை சரிதாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன் என்று நடிகர் முகேஷ் கூறியுள்ளார்.
சரிதாவை திருமணம் செய்த நடிகர் முகேஷ் அவரைப் பிரிந்து கேரளாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை; விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினல் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சரிதாவின் குற்றச்சாட்டுக்கு முகேஷ் சார்பில் அவர் வழக்குரைஞர்வெளியிட்டுள்ள பதிலில், ”சரிதாவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. சரிதாவை சட்டரீதியாகப் பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் அவர் தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet