பாட்னா தொடர் குண்டு வெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது
பாட்னா – பாரதீய ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில்
6 பே பலியானார்கள். 83 பேர் காயம் அடைந்தனர்.பாட்னா ரெயில் நிலையம், பொதுக்கூட்டம் நடக்கும் உள்பகுதி, வெளிப்பகுதி ஆகிய 3 இடங்களில் குண்டுகள் வெடித்தது. இத்திட்டத்தை தீவிரவாதிகள் குழு குழுவாக செயல்பட்டு நடத்தி உள்ளனர்.
பாடானா ரெயில் நிலையத்தில் 9.30 மணிக்குமுதல் குண்டு வெடிப்பும் . 10.30க்கு இரண்டாவது குண்டு வெடிப்பும் நடந்து உள்ளது. 11.40க்கு உத்யோக் வேவன் அருகே 3-வது குண்டுவெடிப்பும், 12.05 மணிக்கு ரீஜென்ட் சினிமா தியேட்டர் அருகே 4-வது குண்டும், 12.10 மணிக்கு காந்தி மைதானத்தின் உட்புறம் 5-வது குண்டும், 12.15 மணிக்கு டுவின் டவர்ஸ் அருகே 6-வது குண்டும், 12.20 மணிக்கு மைதானம் அருகில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருகில் 7-வது குண்டும் 12.25 மணிக்கு மைதானம் அருகில் உள்ள குழந்தைகள் பூங்காவில் 8-வது குண்டும் வெடித்தன.
இத்தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இம்தியாஸ் அன்சாரி என்ற தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் படி அய்னூல், அக்தர், கலீம் என்ற மேலும் 3 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இந்தி யன் முஜாகிதீன் தீவிரவாத அமைபைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet