பாட்னா குண்டுவெடிப்பிற்கு பிறகு இசை வெளியீட்டில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர்: பாஜக கண்டனம்
பீகார் மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற பேரணியை குறிவைத்து நேற்று 7 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கோர சம்பவத்தில் 6 பேர் பலியாயினர் 83 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் பாலிவுட் படமான ரஜ்ஜோவின் இசைவெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி ஷிண்டேவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாட்னாவில் மோசமான குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்ததுடன் பல பேர் காயமடைந்துள்ள நிலையில்அங்கு சென்று சட்ட ஒழுங்கை சீர் செய்யாமல் இசை வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண்டுள்ளதாக பாஜக தலைவர்களில் ஒருவரான சித்தார்த் நாத் கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet