விஜய் மல்லையா மீது வழக்கு
பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ரூ.203 கோடி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நிதி நெருக்கடி காரண மாக விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாக முடங்கியுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2008-2012 ஆம் ஆண்டுகளில், பெங்களூரு பன்னாட்டு விமான நிலைய பயனாளர் மேம்பாட்டு கட்டணம் மற்றும் பயணிகள் சேவைக் கட்டணமாக ரூ.203 கோடியை விமான பயணிகளிடம் இருந்து வசூலித்துள்ளது. இத்தொகையை, பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு கிங்பிஷர் தர வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மோசடி செய்து விட்டதாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் குற்றம்சாற்றியுள்ளது.
இது தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் விஜய் மல்லையா மீது, கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி, பெங்களூரு நீதிமன்றத்தில், பெங்களூரு சர்வதேச விமான நிலையம் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த, நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் விஜய் மல்லையா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet