கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் கடந்த 22–ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 75 மெகாவாட்டாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் படிப்படியாக 210 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது. அந்த மின்சாரம் நெல்லை அபிஷேகப்பட்டி மற்றும் மதுரையில் உள்ள மத்திய மின் தொகுப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீரை குளிர் விக்க செய்யும் பணிக்காக டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
சாதனங்களை குளிர்வித்து, அதன்பின்னர் இந்திய அணு சக்தி கழகத்தின் ஒப்புதலுடன் அடுத்த 48 மணி நேரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் முதலாவது அணு உலையில் நேற்று இரவு 9.45 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அந்த மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டதாக அணுமின் திட்ட வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet