வெங்காய விலை உயர்வுக்கு மத்திய அரசு புது விளக்கம்
வெங்காய விலை உயர்வுக்கு மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே காரணம் என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புது விளக்கம் அளித்துள்ளார்.
வட மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.100-ஐ எட்டிவிட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தூரில் வெங்காயத்தை நகைகள் போல அணிந்து கொண்டு, பாஜக-வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெங்காயம் வாங்குவது நகை வாங்குவது போல ஆகிவிட்டது என்பது அவர்களின் குற்றச்சாற்றாகும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், வெங்காயத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்க உள்ளதாகவும் குறிப்பிட்டனர். வெங்காய விலை குறைய நடவடிக்கை எடுக்கும் வரை, வெங்காயத்தை பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க போவதாகவும் அவர்கள் கூறினர்.
இதேபோல் ராஞ்சியில் வெங்காயம் வாங்க கடன் வழங்க கோரி வங்கியில் விண்ணப்பிக்கும், நூதன போராட்டத்தில் பாஜக-வினர் ஈடுபட்டனர். கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன் போல வெங்காயம் வாங்கவும் இனி வங்கிகளில் கடன் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனிடையே வெங்காயம் அதிகம் விளையும் மராட்டியத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சரத்பவாருக்கும், மொத்த வெங்காய வியாபாரிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம்சாற்றியுள்ளது. இதன் காரணமாகவே வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக எம்.பி ஒருவர் குற்றம்சாற்றியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சரத்பவார் வெங்காய தட்டுப்பாடு தற்காலிகமானதுதான் என்று கூறியுள்ளார். வெங்காய சாகுபடி பரப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet