ஒய்எம்சிஏ மைதானத்தில் பட்டாசு விற்பனை: இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பட்டாசு விற்பனைக் கடைகளில் சனிக்கிழமை (அக்.26) முதல் விற்பனை தொடங்குகிறது.
மக்கள் நெரிசல் மிகுந்த பாரிமுனை பகுதியில் பட்டாசுக் கடைகள் அமைக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம தடை விதித்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளின் அனுமதியுடன் தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை விற்பனை தொடங்கியது.
இதேபோல் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 40-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு விற்பனை சனிக்கிழமை தொடங்குகிறது.
சிவகாசியைச் சேர்ந்த ஸ்டாண்டர்டு,காளீஸ்வரி போன்ற முன்னணி பட்டாசு உற்பத்தி நிறுவனங்ககள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் தயாரிக்கப்பட்ட பட்டாசு வகைகள் விற்பனைக்காக வந்துள்ளன.
அதிக சப்தம் எழுப்பாத பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவையடுத்து கண்ணைக் கவரும் விதவிதமான ஒலி-ஒளியைப் பீய்ச்சும் நவீன ரக பட்டாசுகள் சந்தைக்கு வந்து விட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் இந்த வகைப் பட்டாசுகள் மிகவும் கவர்கின்றன. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் கொஞ்சமும் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காகவே பெற்றோர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வது வழக்கமாகிவிட்டது.
பருவ மழை தீவிரமாகப் பெய்யாமல் இருந்தால் இந்தாண்டு விற்பனை அமோகமாக இருக்கும். கடை வாடகை சற்று அதிகம் என்பதால் விற்பனை நன்றாக இருந்தால் லாபம் ஈட்ட முடியும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பட்டாசு வாங்கவரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் அடங்கிய பேனர்கள் ராயப்பேட்டை மைதானத்தின் நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet