பழனி கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டர்
பழனி மலைக் கோயிலைச் சுற்றிய மர்ம ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் முக்கியமான திருக்கோயில் பழனி கோயிலாகும். பல்வேறு முக்கிய நாட்களில் இக் கோயிலுக்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் பழனி மலைக் கோயிலை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நீலநிற ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாக நெருங்கி சுற்றி வந்தது. மலைக் கோயிலை சுற்றிய ஹெலிகாப்டரால் பக்தர்கள் பரபரப்பு அடைந்தனர். ஹெலிகாப்டர் எதற்கு வந்தது என்று காவல் துறையினருக்கு தெரியவில்லை.
கோவை சூலூரில் இருந்து சிலசமயம் பயிற்சி ஹெலிகாப்டர்கள் பழனி கோயிலை சுற்றிச் செல்வது வழக்கமாகும். அதுபோல ஏதும் பயிற்சி ஹெலிகாப்டர்கள் வந்ததா என்று விசாரிக்கப்படுகிறது. பழனி கோயிலை பாதுகாக்கும் பொருட்டு இதுபோன்று வான்வெளியிலும் வாகனங்கள் சுற்றுவதை தவிர்க்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet