அமெரிக்கா உளவு பார்க்க மன்மோகன் சிங்கிடம் செல்போன் , இ – மெயில் இல்லை .
“பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை. அதனால் அவரை அமெரிக்கா உளவு பார்க்கும் என்ற கவலை இல்லை” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த ‘கார்டியன்’ நாளிதழ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில், “35 உலக நாட்டு தலைவர்களின் தொலைபேசி எண்களை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை, ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவை அந்நாட்டு உளவு அதிகாரிகளிடம் வழங்கின.
இதைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க அரசு ரகசியங்களை அம்பலப்படுத்தி வரும் எட்வர்டு ஸ்நோடென் அளித்த ஓர் ஆவணத்தின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக கார்டியன் தெரிவித்தது.
உலக நாடுகளின் தலைவர்களது தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான இச்செய்தி, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமது தகவல் தொடர்புகள் இவ்வாறு ஒட்டுக் கேட்கப்பட்டதற்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் கோபத்துடன் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்தியப் பிரதமருடைய தொலைப்பேசி உரையாடல்களும் ஒட்டு கேட்க நேர்ந்திருக்குமோ என்று நினைக்கும் நேரத்தில் ” பிரதமர் மன்மோகன் சிங்கிற்கென்று செல்போன் இல்லை, இ-மெயில் இல்லை” – என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது .
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet