தங்க புதையல் நப்பாசை: பெங்களூருவில் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர்.
பெங்களூரு: உத்தர பிரதேசத்தில், பழமை வாய்ந்த கோட்டையில் தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நிலத்தை தோண்டத் துவங்கியுள்ளனர். இதனால், பழமை வாய்ந்த நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் கவலை அடைந்துள்னர்.
உ.பி.,யில், உன்னாவோ என்ற பகுதியில், பழமையான கோட்டை ஒன்றில், தங்கப் புதையல் இருப்பதாக, சாமியார் ஷோபன் சர்க்கார் என்பவர் கூறியதை அடுத்து, அங்கு அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில், 1700ம் ஆண்டுகளில் ஆட்சி செய்த பல மன்னர்களின், மிகப் பழமையான கோட்டைகள் பல உள்ளன. அந்த கோட்டைகளை சுற்றி நடமாடும் மர்ம நபர்கள், தங்கம் கிடைக்குமா என, தோண்டத் துவங்கிஉள்ளனர். இதனால், பழமை வாய்ந்த கோட்டைகள் மற்றும் நினைவுச் சின்னங்களுக்கு ஆபத்து வரலாம் என, தொல்பொருள் ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்னர். அது போல், வரலாற்று நினைவிடங்கள் பலவற்றையும், தங்க வேட்டை பேர்வழிகள், தோண்டத் துவங்கியுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தங்கப் புதையல் ஆசையில் நினைவுச் சின்னங்களை சேதப்படுத்த வேண்டாம்; நினைவுச் சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கும் உண்டு’ என, தொல்பொருள் ஆய்வாளர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டு உள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet