நவராத்திரி சுண்டல்
நவராத்திரி சுண்டல்
தேவையான பொருட்கள்
ராஜ்மா பீன்ஸ் – 1 கப் (சிகப்பு காராமணி)
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
கெட்டியான புளிக்கரைசல் – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய், கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – சிறிதளவு.
பச்சை மிளகாய் – 3 இடித்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காய் – 1½ ஸ்பூன்
செய்முறை
போதிய நீரில் 10-12 மணி நேரம் ராஜ்மா பீன்ஸை ஊற வைக்கவும்.
தண்ணீரை மாற்றி பின் பிரஷர் குக்கரில் 12-15 நிமிடம் வேக வைக்கவும்.
அதிகப்படியான நீரை வடித்துவிடவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, பின்னார் வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் பொன்நிறம் ஆகும் வரை வதக்கவும்.
வேகவைத்த ராஜ்மா, புளிக்கரைசல், உப்பு, துருவிய வெல்லம், அரைத்த கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்
தண்ணீர் ஆவியாகும் வரை சில நிமிடங்கள் கிளறவும்.
நறுக்கிய கொத்துமல்லியை மேலே தூவி பரிமாறவும்.
வேறுமுறை
பச்சை மிளகாய்க்குப் பதிலாக சாம்பார் பவுடரைப் பயன்படுத்தவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்க்கவும்.
வெள்ளைக் காராமணி, மொச்சை, கருப்பு காராமணி, கருப்புக் கொண்டைக்கடலை, சோயா பின்ஸ் ஆகியவற்றையும் இது போன்று சுண்டல் தயாரிக்க பயன்படுத்தலாம்.
சோயா பீன்ஸைப் பயன்படுத்தினால், மற்ற சுண்டல் வகையோடு சேர்த்து பயன்படுத்தவும். தனியே சுண்டல் செய்தால் சுவையாக இருக்காது.
2 (அ) 3 வகையை ஒன்றாகச் சேர்ந்து, பின்னர் சுண்டல் தயாரிக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet