மைசூர் பாகு
மைசூர் பாகு
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 200 கிராம்
நெய் – 400 கிராம்
சர்க்கரை – 400 கிராம்
நீர் – ½ லிட்டர்
செய்முறை
அடிகனமான பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் பொழுது, சர்க்கரையைக் கொட்டி கொதிக்கவிடவும்.. நுரைத்து வருகையில் ஒரு கரண்டி பால் விட்டு ஓரங்களில் ஒதுங்கும் அழுக்கை நீக்கி விடவும்.
இன்னொரு அடுப்பில் நெய் முழுவதையும் ஊற்றி உருக்கி சூடான பாத்திரத்தில் இருக்கும்படி வைக்கவும். சர்க்கரைப் பாகு கொதிக்கும் பொழுது கடலை மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி கட்டிகள் விழாதபடி கிளறியபடியே இருக்கவும். மாவு முழுவதும் சர்க்கரைப் பாகுடன் சேர்ந்து கூழ் பதத்திற்கு வந்ததும் ஒரு கரண்டியைக் கொண்டு சூடான நெய்யை எடுத்து ஊற்றி விடாமல் கிளறவும். இப்படி ஒவ்வொரு கரண்டியாக கலவையில் ஊற்றும் பொழுது கலவை பொங்க வேண்டும்.
நெய்முழுவதையும் ஊற்றி, விடாமல் கிளறிக் கொண்டிருக்கையில் நுரைகள் போல் பொத்தல்கள் ஏற்படும். இது தான் சரியான பக்குவம். உடனடியாக கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.
இளஞ்சூட்டில் மைசூர் பாகு இருக்கும் போதே கத்தியால் வில்லைகள் போடவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet