மட்டன் சாப்ஸ்
மட்டன் சாப்ஸ்
தேவையானப் பொருட்கள்
ஆட்டுக் கறி – 500 கிராம்
மிளகு – 25 கிராம்
கிராம்பு – 6 எண்ணிக்கை
இலவங்கப் பட்டை – 10 கிராம்
நல்லெண்ணெய் – 150 கிராம்
செய்முறை
கறியைக் துண்டாக நறுக்கி எடுத்து , நிறைய நீர் விட்டு அலசிய பின், பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் அரை லிட்டர் வைத்து அடுப்பில் சீரான அனலில் வேக வைக்க வேண்டும்.
கறி வெந்து கொண்டிருக்கும் பொழுதே மிளகு, கிராம்பு, பட்டை இவைகளை நன்றாக அரைத்துக் கறியுடன் கலந்து கிளறி வேகவிடவேண்டும். தேவையான உப்பைச் சேர்த்தக்கொள்ளவும்.
கறி நன்றாக வெந்த பின் வாணலியை அடுப்பில் வைத்து, தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் வேக வைத்த கறியை எண்ணெயில் கொட்டி நன்றாக சிவக்கச் சிவக்க வதக்கி எடுத்து வைக்கவும். இப்பொழுது மட்டன் சாப்ஸ் சூடாக, சுவையாகத் தயார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet