முந்திரி பர்பி
முந்திரி பர்பி
தேவையான பொருட்கள்
முந்திரிப் பருப்பு – 1 கப்
சர்க்கரை – 1 ¾ கப்
நெய் – 1 ½ கப்
சமையல் சோடா மாவு – ஒரு சிட்டிகை
செய்முறை
முந்திரிப்பருப்பைச் சிறிதளவே தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியில் ½ கப் தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து சூடாக்கவும்.
இரண்டு கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து நடுத்தர தீயில் சீராகக் கிளறிவிடவும்.
கலவை அடியில் ஒட்ட ஆரம்பிக்கும் போது சிறிது சிறிதாக சூடான உருக்கிய நெய்யைச் சேர்க்கவும்.
பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்வரை கிளறி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, சிறிதளவு சோடா மாவைச் சேர்த்து, நுரைத்து வந்ததும் உடனே எண்ணெய் தடவிய தட்டில் கலவையைக் கொட்டவும்.
இளஞ்சூட்டில் பர்பி இருக்கும் போதே கத்தியால் வில்லைகள் போடவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet