மாங்காய் ஊறுகாய்
மாங்காய் ஊறுகாய்
தேவையானவை
மாங்காய் – 2
பொடித்த உப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகு – 2 டீஸ்பூன்
செய்முறை
மாங்காயை சுத்தம் செய்து உலரவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உப்பு சேர்த்துக் குலுக்கிவிடவும். ஒரு டீஸ்பூன் கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடுகுப் பொடி, வெந்தயப் பொடி எல்லாவற்றையும் மாங்காயில் சேர்க்கவும். எண்ணெயைக் காய வைத்து ஒரு டீஸ்பூன் கடுகு தாளித்து, மாங்காயில் கொட்டிக்கிளறவும்.
எண்ணெய், ஊறுகாயின் மேலே பிரிந்து நிற்குமாறு இருப்பதுதான் அருமையான பதம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet