ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் டி.வி-யில் தோன்றி தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.
சமீபகாலமாக சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகமாகத் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்களிடையே கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுக்க அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மா சே துங் காலத்து ஸ்டைலில் ஒரு யுத்தியை கையாண்டு வருகிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் இப்போது அந்த நாட்டு தொலைக்காட்சியில் பிரைம் டைமில் வந்து பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். “அதிகார வெறி எனக்கு தலைக்கேறி விட்டது. சின்ன கார் போதாது என்று சொகுசு கார் வாங்கிவிட்டேன். ஆடம்பரமான கேளிக்கைகளில் கலந்துகொள்கிறேன். “அதிரடி சோதனை” என்ற பெயரில் வெறுமனே விளம்பரத்துக்காக என் நேரத்தைச் செலவு செய்கிறேன்” இந்த ரீதியில் ஒவ்வொரு மூத்த அதிகாரியும் தான் செய்த தவறுகளை “லைவ்”வாக டி.வி-யில் சொல்ல… அதை நாட்டாமை நாற்காலியில் உட்கார்ந்து சீரியஸாக கவனிக்கிறார்கள். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்.
“சுய விமர்சனம்” என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற பாவமன்னிப்பு நிகழ்ச்சிகள், இப்போது திடீர் திடீர் என்று சீனாவில் நடப்பதால்…ஊழலுக்கு எதிராக சாட்டையை அரசு சுழட்டுவதாக மக்களை நம்பவைக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் கணக்கு போடுகின்றனர்.
சீன அரசுக்கு எதிராக இணையதளத்தில் காரசாரமாக விமர்சனம் செய்துவந்த சார்லஸ் ஜியூ, அந்த நாட்டு மக்களிடையே மிகமிக பிரபலம், வதந்தியை பரப்பினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட அவர், திடீர் என்று அரசு தொலைக்காட்சியில் தோன்றி, சுதந்திரம் என்ற பெயரில் நான் எனது எல்லையை கடந்துவிட்டேன்” என்று பாவமன்னிப்பு கோரியதும், சம்பந்தா சம்பந்மம் இல்லாமல், “இந்த இடத்தில் நான் ஒரு உண்மையையும் சொல்லியாக வேண்டும். நான் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருந்தேன்” என்று தானாகவே சொல்லி, அதற்கான தண்டனையும் கேட்டு பெற்றுக்கொண்டார். இவரைப் போலவே பல்வேறு குற்றசாட்டுகளுக்கு ஆளாகி சிறையில் இருக்கும் பல அதிகாரிகளும் தொழிலதிபர்களும் அவ்வப்போது டி.வி-யில் தோன்றி தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுப்பது தொடர்கிறது. அநியாயத்தக்கு நியாயமாக நடந்துகொள்ளும் இந்த “நல்லவர்களால்” அந்த நாட்டின் நீதிமன்றம் செயல்பாடுகள் குழம்பிப்போய்த்தான் இருக்கிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet