சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – வெள்ளை கொண்டக் கடலை சுண்டல்
வெள்ளை கொண்டக் கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டக் கடலை – 500 கிராம்
தேங்காய் – ½ மூடி
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்த பருப்பு – 1 ஸ்பூன்
தூள் பெருங்காயம் – ½ ஸ்பூன்
வர மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
மல்லித்தழை – தேவையான அளவு
தேங்காயெண்ணெய் – தேவையான அளவு
இஞ்சித்துண்டு – 1
செய்முறை
முதல்நாள் மாலை கொண்டக் கடலையை ஊற வைக்கவும். மறுநாள் இதனை நன்றாகக் கழுவி எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, 8 விசிலுக்கு குறையாமல் வைத்து இறக்கவும். ஆவி நீங்கியதும் திறந்து, தண்ணீரை வடிய வைக்கவும்.
வாணலியில் 50 மில்லி எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, அதில் அரைத்த இஞ்சி, கிள்ளிய மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, தேங்காய் துருவலை கலந்து சுற்றிக் கிளறி கடலையைக் கொட்டி 5 நிமிடம் கிளறி, நறுக்கிய மல்லித் தழையைத் தூவி இறக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet