உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களில் நான்கு இந்திய பெண்கள்
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
உலகின் திறன்வாய்ந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் உள்பட 4 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது, பிரேசிலைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் கேஸ் கம்பெனியான பெட்ரோபிராஸின் சிஇஓ மரியா டாஸ் கிராஸஸ் ஃபாஸ்டர்.
இரண்டாவது இடத்தில் துருக்கியைச் சேர்ந்த சபான்சி ஹோல்டிங்ஸின் குலெர் சபான்சியும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான வெஸ்ட்பேக்கின் சிஇஏ கெய்ல் கெல்லியும் உள்ளனர்.
பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கொச்சார் 4வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் அவர் 5வது இடத்தில் இருந்தார். தேசிய பங்குச் சந்தையின் முதல் பெண் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா இந்த பட்டியலில் 17வது இடத்தை பிடித்துள்ளார். இவர் இப்பட்டியலில் முதன்முறையாக இடம் பெற்றுள்ளார்.
ஆக்சிஸ் வங்கியின் ஷிகா சர்மா 32வது இடத்திலும், ஹெச்.எஸ்.பி.சி. இன் தலைவர் நைனா லால் கித்வாய் 42வது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்காவின் அதிகாரமிக்க பெண் தொழில் அதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை தனியாக வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெப்சி நிறுவன தலைவர் இந்திரா நூயி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet